NEET PHYSICS STRATEGY

NEET Physics-ல 150+ எடுக்க 180 நாள் பிளான்: படிச்சா மட்டும் போதாது, Solve பண்ணனும்

NST Team | November 23, 2026 | 6 min read

போன மாசம் நம்ம Physics Zero to Hero course-ஐ launch பண்ணோம். ஒரே ஒரு launch video மட்டும்தான் போட்டோம், ஆனா அதுல இருந்தே 300-க்கும் மேல students join பண்ணி இப்போ Physics படிச்சிட்டு இருக்காங்க. காரணம் ரொம்ப simple. NEET aspirants-கிட்ட "உனக்கு எந்த subject கஷ்டம்?"னு கேட்டா, 95%-க்கும் மேல சொல்றது Physics தான்.

நிறைய பேர் இப்படித்தான் சொல்றாங்க: "எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கிறேன், நிறைய sums போட்டு பாக்கறேன். ஆனாலும் exam-ல MCQ solve ஆகமாட்டேங்குது. 100, 120 marks-லாம் கூட எடுக்க முடியல, 50, 60-லயே stuck ஆகிட்டேன்." உங்களுக்கும் இதே நிலைமைன்னா, இந்த blog உங்களுக்கானதுதான்.

NEET-ல Physics ஏன் முக்கியம்?

NEET exam 720 marks-க்கு. Biology 360, Chemistry 180, Physics 180. Biology-ல NCERT படிச்சு நல்லா MCQ practice பண்ணா self study-லயே 340+ வரைக்கும் போகலாம். Chemistry-ல NCERT concepts புரிஞ்சு, NEET PYQ, JEE Main PYQ, NCERT back questions practice பண்ணா 180-ல 150+ comfortable-ஆ attend பண்ண முடியும். ஆனா Physics-ல மட்டும் அந்த shortcut வேலை செய்யாது. காரணம், கற்ற concept-ஐ MCQ-ல நேரடியா apply பண்ண முடியாது. அதுக்கான techniques-ஐ தனியா கத்துக்கணும்.

"Physics-ஐ படிக்க முடியாது, Solve பண்ணனும்."

490 vs 550: 60 marks-ல என்ன மாறும்?

இதை ஒரு practical example-ஆ பார்க்கலாம். ஒரு student Biology-ல 300, Chemistry-ல 130, Physics-ல 60 வாங்குறாங்கன்னு வெச்சுக்கோங்க. மொத்தம் 490. இதே student Biology 300, Chemistry 130 அப்படியே வெச்சுட்டு, Physics-ல கொஞ்சம் hard work போட்டு 60-ல இருந்து 120 வாங்கிட்டாங்கன்னா மொத்தம் 550. 490-ஐயும் 550-ஐயும் பார்க்கும்போது வித்தியாசம் சின்னதா தெரியும். ஆனா அதுக்கு Physics-ல extra 15 questions சரியா போட்டா போதும், அது உங்க NEET cut-off நிலைமையையே மாத்திடும்.

இன்னொரு முக்கியமான விஷயம்: Physics-ல எல்லா questions-உம் கஷ்டம் கிடையாது. சுமார் 15 questions easy to average-ஆ இருக்கும். சுமார் 20 questions moderate-ஆ இருக்கும். நிறைய பேர் தப்பு பண்றதும் stuck ஆகுறதும் இந்த moderate questions-ல தான். அந்த extra 20 questions-ஐ நீங்க பிடிச்சுட்டீங்கன்னா 120-140 வரைக்கும் போக முடியும். அதுக்கு Physics-ஐ complete பண்ணா பத்தாது, master பண்ணணும்.

Win Physics, Win MBBS Seat - NEET Physics 120+

NST Dr. Sudharshan: Win Physics, Win MBBS Seat

Physics Mastery என்றால் என்ன?

அப்பா Physics-ல mastery-னும்னா என்ன? Syllabus-ஐ complete பண்ணிட்டா போதும்னு நினைக்க கூடாது. Concepts-ஐ நல்லா புரிஞ்சுக்கிட்டு, அதில இருந்து MCQ-க்கு bridge போடத் தெரியணும். Biology, Chemistry-ல இந்த bridging அவ்வளவு தேவையில்ல, ஆனா Physics-ல படிச்ச concept-ல இருந்து MCQ-க்கு bridge பண்ணினாதான் answer வரும். அதுக்கு மூணு steps: ஒரு concept-ல இருந்து என்னென்ன different scenarios கேட்க முடியும்னு தெரிஞ்சுக்கணும், அந்த scenario-ல MCQ-ஐ எப்படி approach பண்ணணும்னு technique-ஐ கத்துக்கணும், அப்புறம் MCQs வெச்சு அதை practice பண்ணணும். இதை பண்ணப் பண்ணத்தான் Physics marks improve ஆகும்.

One-shot Videos vs Course

இந்த இடத்துல ஒரு doubt வரலாம்: YouTube-ல ஏற்கனவே நிறைய one-shot videos இருக்கே, அதெல்லாம் useless-ஆ? இல்ல. One-shot videos 100% useful, ஆனா அது யாருக்கு, எந்த நேரத்துல்னுதான் முக்கியம். ஒரு topic-ல 5 MCQ பார்த்துட்டு, அதுக்கு பின்னாடி இருக்கிற 50 MCQ-ஐ நீங்களே யோசிச்சு solve பண்ணுற அளவுக்கு extra effort போடத் தயாரா இருந்தா, ஒன்-ஷாட் உங்களுக்கு perfect. ஆனா நிறைய students one-shot பார்த்து, MCQ போட்டுப் பார்த்தும், test-ல marks improve ஆகாம நிக்கறாங்க.

ஒரு example சொல்றேன். Laws of Motion chapter-ல Newton's laws, friction, connected body motion, pulley-string-wedge problems, circular motion, equilibrium இப்படி நிறைய topics இருக்கு. One-shot-ல ஒவ்வொரு topic-ஐயும் short-ஆ சொல்லி, 5, 6 MCQ போட்டு, முழுசா 20-30 sums வரை cover பண்ணலாம். ஆனா friction-ங்கற ஒரு topic-குள்ளேயே horizontal plane, inclined plane, mass-pulley system, wall சம்பந்தப்பட்ட கேஸ்னு 5, 6 subheadings இருக்கு. ஒவ்வொன்னுலயும் 5, 6 scenarios. இந்த ஒரே topic-ல இருந்து மட்டும் 30-40 MCQ-க்கு மேல generate பண்ண முடியும். இதைல்லாம் ஒரு one-shot-ல cover பண்ண நேரம் கிடையாது. சுருக்கமா சொன்னா: one-shot-ல ஒரு 15 problems class-ல solve பண்றதை பார்பீங்க. Course-ல ஒரு chapter-ல இருக்கிற எல்லா topics, எல்லா scenarios-ஐயும் cover பண்ற சுமார் 150 problems-ஐ நீங்களே solve பண்ணுவீங்க. Physics-ல பார்த்தா போதாது, solve பண்ணா மட்டும்தான் marks improve ஆகும்.

Zero to Hero Course-ல என்ன கிடைக்கும்?

Zero to Hero course-ல நீங்க வெறுமனே classes மட்டும் பார்க்க மாட்டீங்க. NEET syllabus-ல இருக்கிற எல்லா Physics chapters-உம் topic by topic, zero level-ல இருந்து concept சொல்லிக் கொடுத்து, அந்த concept-ல இருந்து எப்படியெல்லாம் MCQ கேட்பாங்க, அதுக்கான application, techniques என்னன்னு teach பண்ணி, JEE Main, NEET level problems-ஐ class-குள்ளேயே solve பண்ண வைப்போம். ஒவ்வொரு class முடிஞ்சதும் Daily Practice Test இருக்கும். ஒரு chapter முடியும்போது, அந்த chapter-ல இருந்து கேட்க அதிக chance இருக்கிற 45 MCQs வெச்சு ஒரு Chapter Test, அதுக்கு complete solution discussion-உம் உண்டு. Doubt solving-உம் இருக்கு.

Course யாருக்கு suit ஆகும்?

இந்த course யாருக்கு suit ஆகும்னு கேட்டா, நாலு மாதிரி students-க்கு. ஒண்ணு, 12th முடிச்சு drop பண்ணி, எந்த coaching-உம் போகாம self study பண்றவங்க, ஆனா Physics-ல மட்டும் hold கிடைக்கலன்னா. ரெண்டு, 11th படிக்கிறவங்க, school-ல சொல்லிக் கொடுக்கிறது புரியல, MCQ solve பண்ண முடியலன்னா. மூணு, 12th படிக்கிறவங்க, 11th Physics சரியா படிக்கல, இப்போ 11th-ஐயும் 12th-ஐயும் side by side சரி பண்ணணும்னு நினைச்சா. நாலு, ஏதோ ஒரு offline coaching-ல படிக்கிற droppers, அங்க நடத்துற Physics class புரியல, mock test-ல 100 marks கூட வாங்க முடியலன்னா, இந்த course ஒரு passive support tool-ஆ இருக்கும்.

6 மாச Physics Study Plan

இன்னும் NEET-க்கு ஆறே மாசம்தான் இருக்கு. இப்போ ஆரம்பிச்சா, daily schedule வெச்சு hard work போட்டா முதல் 4 மாசத்துல Physics syllabus-ஐ முடிச்சிடலாம். கடைசி 2 மாசம் multiple revisions-க்கு கிடைக்கும். ஆனா இன்னும் ஒண்ணு, ரெண்டு மாசம் கழிச்சு ஆரம்பிச்சீங்கன்னா, அப்போ one-shot videos பார்க்கிற அளவுக்குத்தான் நேரம் இருக்கும். அதனால இப்போ இருக்கிற நேரம்தான் உங்க பெரிய advantage. அதை சரியா use பண்ணுங்க.

இந்த process-ல நீங்க வெறுமனே watch பண்ணிட்டு இருக்கப் போறீங்களா, இல்ல solve பண்ணப் போறீங்களா? Decide பண்ணுங்க. Consistent-ஆ hard work போட்டா, உங்க MBBS seat கனவை உங்களாலயும் crack பண்ண முடியும். இன்னைக்கே ஒரு chapter-ஓட ஆரம்பிங்க: concepts review பண்ணுங்க, ஒரு set MCQ solve பண்ணுங்க, எங்க தப்பு பண்ணீங்கன்னு பாருங்க. Physics-ல உங்களுக்கு எந்த chapter ரொம்ப கஷ்டமா இருக்கு? Comments-ல சொல்லுங்க.

இந்த blog, NEET Strategies in Tamil YouTube channel-ல Dr. Sudharshan சொன்ன video-வோட written version.