NEET Physics | NEET 2027 | NST Team

Physics-ல 60 தாண்டலையா? இந்த 8 Chapters போதும் 100+ எடுக்க

Mock Test Physics-ல 30, 40 மார்க் தான் வருதா? எவ்வளவு படிச்சாலும் 60 தாண்டலையா? அப்போ எல்லா chapters-யும் ஒரே நேரத்துல படிக்க வேண்டாம். சில easy chapters-ல இருந்து ஒவ்வொரு வருஷமும் நிறைய questions வருது. அதுல focus பண்ணா 100+ ரொம்ப possible.

Physics-ல 100+ எடுக்க 8 chapters NEET 2027

Physics-ல ஏன் marks கம்மியா வருது? நிறைய பேர் எடுத்த உடனே Mechanics-க்கு போய் தலையை விடுறாங்க. அதுக்கு பதிலா confidence boost பண்ற easy chapters-ஐ முதல்ல முடிங்க. Last 5 years NEET papers-ஐ easy, moderate, difficult-ஆ பிரிச்சு பார்த்தா எந்த chapters-ல இருந்து easy questions repeat ஆகுதுன்னு தெளிவா தெரியுது.

Physics-ல 100 மார்க் எடுக்க 45 questions-ல 25 correct பண்ணா போதும் (25 × 4 = 100). ஆனா exam pressure-ல 25 மட்டும் attempt பண்ணி எல்லாத்தையும் correct ஆக்குறது கஷ்டம். அதனால strategy இது: குறைஞ்சது 35 questions attempt பண்ணனும். அதுல 8 தப்பானாலும் 27 correct = 108, 8 தப்புக்கு -8 போனா 100 மார்க்.

Blind guess வேண்டாம். Confident-ஆ attempt பண்ணுங்க. அடுத்த mock test-ல இருந்தே 35 questions-க்கு குறையாம attempt பண்ற level-க்கு preparation-ஐ set பண்ணுவோம்.

MOCK TEST

Mock test-ல marks ஏன் கம்மியா வருது?

NST-ல நடத்துற mock test ஆனாலும் சரி, வேற coaching ஆனாலும் சரி, difficulty NEET-ஐ விட ஒரு standard மேலயே இருக்கும். அப்போதான் exam-ல பதட்டம் இல்லாம எழுத முடியும். அதனால mock-ல marks கம்மியா வந்தா confidence உடைச்சுக்காதீங்க, இது ஒரு strategy தான். 2025 தான் இதுவரைக்கும் ரொம்ப tough paper (easy வெறும் 12, difficult 10). அதனால practice கொஞ்சம் மேல level-ல இருக்கட்டும்.

LAST 5 YEARS ANALYSIS

எத்தனை easy questions வருது?

NEET Physics paper-ஐ easy, moderate, difficult-ஆ பிரிச்சு பார்த்தா: 2022-ல 23 easy, 21 moderate. 2023-ல 34 easy, 14 moderate. 2024-ல 24 easy, 22 moderate. 2025-ல 12 easy, 23 moderate, 10 difficult. 2026 (May 3) paper-ல 29 easy, 14 moderate. Re-NEET 2026-ல 24 easy, 18 moderate. Average-ஆ பார்த்தா சுமார் 20 easy, 17 moderate, 8 difficult. உங்க target: அந்த 20 easy questions-ஐ எல்லா mock-லயும் 100% correct பண்ணுங்க. 17 moderate-ல குறைஞ்சது 7 correct பண்ணுங்க. 20 + 7 = 27 correct. 8 difficult questions நமக்கு வேண்டாம், அது AIR-ல top போறவங்களுக்கு. Mock-ல first round-ல easy 20-ஐ பிடிச்சு முடிங்க, second round-ல moderate-ஐ try பண்ணுங்க.

முதல் 3 Chapters

01

Current Electricity: சராசரி 3 முதல் 4 questions. Chapter முழுசும் important, ஒரு topic-ஐ கூட விடாதீங்க.

02

Units & Measurements: சராசரி 3 questions. Dimensions & applications-ல 1 முதல் 2, error analysis-ல 1, Vernier caliper, screw gauge மாதிரி instruments-ல இருந்தும் வரும்.

03

Electrostatic Potential & Capacitance: underrated chapter. குறைஞ்சது 3 easy-to-average questions. Potential, dipole, capacitors-ல இருந்து வரும்.

அடுத்த 3 Chapters

04

Semiconductor Electronics: சராசரி 2 questions. Syllabus-ல பாதி remove ஆயிடுச்சு, மீதி இருக்கிறதுல இருந்து அதே patterns repeat ஆகுது. Logic gates கண்டிப்பா miss பண்ணாதீங்க.

05

Alternating Current: எல்லா வருஷமும் குறைஞ்சது 2 questions. Series LCR circuit-ல இருந்து 1 confirm, இன்னொன்னு RC, LC இல்ல RL circuit-ல இருந்து வரும்.

06

Dual Nature: சராசரி 2 questions. Formulas-ல இருந்து அப்படியே கேப்பாங்க, graph-based questions-ம் வரும். NEET, JEE Main PYQ கொஞ்சம் போட்டா அடிச்சிடலாம்.

கடைசி 2 Chapters

07

Atoms: சராசரி 2 questions. Dual Nature மாதிரியே formulas, graphs-ல இருந்து வரும். ரொம்ப easy chapter.

08

Electromagnetic Waves: சராசரி 2 questions. EM waves-ன் properties-ல இருந்து 1, displacement current-ல இருந்து 1.

PATTERNS

Chapters தாண்டி இந்த 2 patterns-ஐயும் பிடிங்க

Graph-based questions: NEET Physics paper-ல குறைஞ்சது 4 questions graph-ஐ வச்சு வருது (2022-ல 5, 2024-ல 5, 2026-ல 4, Re-NEET-ல 7). Graph basics தெரிஞ்சா options-ஐ rule out பண்ணியே முடிச்சிடலாம். Instrument-based questions: வருஷம் குறைஞ்சது 2, சில வருஷம் 3 வரை. Vernier caliper 2024, 2025, 2026, Re-NEET நாலு paper-லயும் வந்திருக்கு. அடுத்து screw gauge, meter bridge, Wheatstone bridge, galvanometer conversion, microscope, telescope, simple pendulum experiments-ல இருந்தும் கேப்பாங்க.

STUDY PLAN

ஒவ்வொரு chapter-க்கும் இந்த 5 steps

1) Physics-க்கு ஒரு teacher-ஐ select பண்ணுங்க. யார் வேணும்னாலும் ஆகலாம், ஆனா உங்களுக்கு set ஆகணும், MCQ approach தெரியணும். 2) Detailed classes பாருங்க, one shot-ஐ விட அது better. 3) Class notes எடுத்து, class முடிஞ்ச உடனே கண்ணை மூடி revise பண்ணுங்க. Physics-ஐ NCERT-ல படிக்க முடியாது, உங்க notes தான் base. 4) அதே topic-ல இருந்து 10 முதல் 15 MCQ சால்வ் பண்ணுங்க. தப்பான, தெரியாத questions-க்கு solution படிச்சு, approach-ஐ short notes-ஆ எழுதி வச்சுக்கோங்க. 5) Topic முடிஞ்ச உடனே relevant JEE Main & NEET PYQs போடுங்க, ஒரு வாரம் கழிச்சு revise பண்ணுங்க. Time கம்மியா இருந்தா முதல்ல இந்த 8 chapters-க்கு மட்டும் இந்த cycle follow பண்ணுங்க.

FAQ

உங்களுக்கு வர்ற common doubts-க்கு பதில்.

ஏன் குறைஞ்சது 35 questions attempt பண்ணனும்?

NEET-ல 25 correct போதும்னாலும் exam pressure-ல 25-ஐ மட்டும் attempt பண்ணி எல்லாத்தையும் correct ஆக்க முடியாது. 35 attempt பண்ணா 8 தப்பு வந்தாலும் 27 correct = 108, -8 போனா 100 மார்க் கிடைக்கும்.

Mock test-ல 30, 40 தான் வருது, என்ன பண்றது?

Mock-ல difficulty NEET-ஐ விட ஒரு standard மேல இருக்கும், அதனால உடைஞ்சு போகாதீங்க. முதல்ல 20 easy questions-ஐ pick பண்ணி 100% correct பண்ணுங்க, அப்புறம் moderate-ல குறைஞ்சது 7 correct பண்ணுங்க.

Time ரொம்ப கம்மியா இருந்தா என்ன பண்றது?

One shot videos பார்க்கலாம், ஆனா best option detailed classes தான். முதல்ல இந்த 8 chapters-க்கு மட்டும் time போடுங்க, அதுக்கு அப்புறம் மத்த chapters-க்கு போகலாம்.

இன்னும் doubts இருக்கா? NST Team-கிட்ட பேசுங்க

Physics doubts-க்கு 8610690010 number-ல WhatsApp இல்ல call பண்ணி contact பண்ணுங்க. இன்னும் classes, free trial, PDF எல்லாம் வேணும்னா Neet Strategies Tamil app-ஐ Play Store-ல install பண்ணுங்க. App-ல E-book section-ல இந்த session-ஓட PDF இருக்கு. தினமும் update-களுக்கு எங்க WhatsApp Channel-ஐ Join பண்ணுங்க.